செய்திகள் :

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

post image

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 26) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (ஜூலை 26) முதல் ஜூலை 31 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஆரஞ்சு எச்சரிக்கை: நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 26) பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 26) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சியில் 100 மி.மீ. மழை பதிவானது. கோவை மாவட்டம், சின்னக்கல்லாறு - 100, வால்பாறை பிடிஓ -80, சின்கோனா, மேல்பவானி(நீலகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), உபாசி (கோவை), ஊத்து (திருநெல்வேலி) - 70 மி.மீ. மழை பதிவானது.

கரையை கடந்த புயல் சின்னம்: வடக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி(புயல்சின்னம்) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30-க்கு மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரைக்கு இடையே கரையைக் கடந்து வங்கதேச கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள் மன்னாா் வளைகுடா, குமரிக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் வங்கக் கடலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூலை 26, 27 ) மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்றுவீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவைக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு தாண்டி அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நில... மேலும் பார்க்க

பருவ காலங்களை கணிக்கும் செயற்கைக்கோள்: ஜூலை 30ல் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர்

மழைக்காலம் மற்றும் பருவ காலங்களில் மேகமூட்டங்கள் எவ்வளவு இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய விஷயங்களை தெளிவாக புகைப்படம் எடுக்க உதவும் புதிய செயற்கைக்கோள், ஜூலை 30 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ... மேலும் பார்க்க

பொதுப்பணித் துறை சாதனைகள்: தமிழக அரசு விளக்கம்!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் பொதுப்பணித் துறையின் சாதனைகளாக கட்டடக்கலை மாட்சியைப் புலப்படுத்தும் எழில்மிகு கட்டடங்கள் அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள... மேலும் பார்க்க

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் மனு! தங்கம் தென்னரசு அளிப்பார்!

தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குவார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும்... மேலும் பார்க்க

திருச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் இபிஎஸ்!

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(ஜூலை 26) இரவு 10.45-க்கு வரவேற்கவுள்ளார்.தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக இன்று வருகை தரும் பிரதமர் நர... மேலும் பார்க்க

கோவையில் ஒரு அபிராமி! நான்கரை வயது குழந்தையைக் கொன்ற தாய்

கோவையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த நான்கரை வயது ஆண் குழந்தையைக் கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம்... மேலும் பார்க்க