செய்திகள் :

சிக்கலில் சின்னசாமி மைதானம்! ஆர்சிபி கூட்ட நெரிசல் பலி விவகாரம்!

post image

பெங்களூருவின் எம்.சின்னசாமி மைதானம் பெரியளவிலான நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்று விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 11 பேர் பரிதாபமாக பலியான நிலையில், சம்பவத்துக்கு காரணமாக அமைந்த எம்.சின்னசாமி மைதானமானது பாதுகாப்பானது அல்ல என்று விசாரணைக் குழு அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி) அணி முதன்முறையாக கோப்பையை வென்றது. இதையொட்டி, பெங்களூரு எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 4ஆம் தேதியில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மைதானத்தின் வாயில் மற்றும் சுற்றுப்புறத்தில் சுமாா் 3 லட்சம் ரசிகா்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட கா்நாடக அரசு, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்தது.

மேலும், இந்த அசம்பாவிதத்தை தடுக்க தவறியதாக பெங்களூரு நகர காவல் ஆணையா் உள்பட காவல்துறை அதிகாரிகள் சிலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த உயிரிழப்புகளுக்கு ஆர்சிபி அணி, கர்நாடக கிரிக்கெட் கழகம், காவல்துறையினரின் ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என்று விசாரணை ஆணைய அறிக்கையில் தெரிவித்தது.

கூட்டநெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான்மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் தனிநபா் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

கர்நாடக மாநில அரசிடம் டிகுன்ஹா தலைமையிலான விசாரணைக் குழு அளித்த அறிக்கையில், சின்னசாமி மைதானம் பெரியளவிலான நிகழ்வுகள் நடத்த போதிய வசதிகள் இல்லாதது, பொது பாதுகாப்புக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்துகளை ஏற்படுத்துவதாக கூறியதுடன், சின்னசாமி மைதானம் பாதுகாப்பானது அல்ல, தகுதியற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவின் இந்த அறிக்கையை அம்மாநில அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதனிடையே, ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 போட்டியின் தொடக்கம் மற்றும் இறுதிப் போட்டிகளும் சின்னசாமி மைதானத்தில்தான் நடத்தப்படவிருப்பதாக இருந்தது. ஆனால், தற்போது விசாரணைக் குழுவின் அறிக்கையால் ஐசிசி மகளிர் உலகக் கோப்பைப் போட்டிகள் இடமாற்றம் செய்யும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், அடுத்தாண்டு பிரீமியர் லீக் போட்டிகளும் சின்னசாமி மைதானத்தில் நடத்தப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படிக்க:உலகளவில் பெரும் மதிப்புடைய தலைவர்கள்! பிரதமர் மோடி முதலிடம்!

M Chinnaswamy Stadium unsuitable for large-scale events after Bengaluru stampede

நாடாளுமன்றத்தை முடக்குவது எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பு -கிரண் ரிஜிஜு

நாடாளுமன்றத்தை முடக்குவது அரசைவிட எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பாகும்; அரசை பொறுப்புக் கூறச் செய்யும் வாய்ப்பை எதிா்க்கட்சிகள் இழக்கின்றன என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரி... மேலும் பார்க்க

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டும்: மம்தா பானா்ஜி

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டுவது அவசியம் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சனிக்கிழமை தெரிவித்தாா். சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் இந்தியாவைவிட்டு வெளியேற... மேலும் பார்க்க

பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்

‘பிகாா் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை சீா்குலைந்துள்ள நிலையில், முதல்வா் நீதீஷ் குமாா் தலைமையிலான அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்’ என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும் லோக்ஜன சக்தி ... மேலும் பார்க்க

பள்ளிகளில் கட்டாய பாதுகாப்பு தணிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை ஆய்வு செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜலாவா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

மோடி - டிரம்ப் நட்பு வெற்றுத்தனமானது: காங்கிரஸ் விமா்சனம்

‘அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் மோடி பெருமையோடு குறிப்பிடும் நட்பு வெற்றுத்தனமானது; டிரம்ப்பின் கருத்துகள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் இது நிரூபணமாகி வருகிறது’ என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த... மேலும் பார்க்க

இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அண்மையில் கையொப்பமான நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகம் மற்றும் ... மேலும் பார்க்க