சாதிவாரி கணக்கெடுப்பு: ``ராகுல் காந்திபோல ஸ்டாலின் தவறை உணர்வாரா?'' - அன்புமணி க...
சத்தீஸ்கரில் தேடப்பட்டு வந்த 4 நக்சல்கள் கைது!
சத்தீஸ்கர் மாநிலத்தில், வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்ற 4 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுக்மா மாவட்டத்தில், கடந்த ஜூன் 29 ஆம் தேதி, பாதுகாப்புப் படையினரின் முகாம் அருகில், நக்சல்கள் ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டை பொருத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், 4 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், பொண்டங்குடா கிராமத்தின் அருகில், மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் மாநில காவல் துறையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையில் தமு ஜோகா (வயது 25), புனெம் புத்ரா (24), மத்கம் பீமா (23) மற்றும் மிடியம் ஆயட்டு (24) ஆகியோர் கைது செய்யப்பட்டதாக, அதிகாரிகள் இன்று (ஜூலை 25) தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 4 பேரும் தடை செய்யப்பட்ட, மாவோயிஸ்ட் கட்சியின் ஜகர்குண்டா பகுதி உறுப்பினர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், பல்வேறு நக்சல் தாக்குதல் சம்பவங்களில் தேடப்பட்டு வந்த அவர்கள் 4 பேரிடமிருந்து மற்றொரு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: பிகாரில் வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கை: முழுவீச்சில் எதிர்ப்போம்! -முதல்வர் ஸ்டாலின்