இலங்கை: 40 நாடுகளுக்கு இலவச விசா!
இலங்கைக்கு வருகை தரும் சுமார் 40 வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருகை தரும், இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய 7 வெளிநாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அந்நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, 40 நாடுகளின் மக்களுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்துக்கு, இலங்கையின் நாடாளுமன்றம் கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பாகிஸ்தான், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 40 நாடுகளின் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தத் திட்டத்தின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 66 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.571 கோடி) இழப்பு ஏற்பட்டாலும்; இதன்மூலம், மறைமுகமான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி இழப்பீடை சரிசெய்யும் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்: பதற்றமான சுழல்!