செய்திகள் :

இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

post image

இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர்.

இத்தாலியின் பிரெசியா மாகாணத்தில் உள்ள அஸ்ஸானோ மெல்லா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வெள்ளிக்கிழமை விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்தது. அதில் பயணம் செய்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விமானத்தின் தீப்பிழம்புகள் அந்த நேரத்தில் நெடுஞ்சாலையில் கடந்து சென்ற 2 வாகனங்களுக்கும் பரவியது. மற்ற வாகனங்கள் உடனே நிறுத்தப்பட்டன. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். மற்றொரு நபர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்தியா - நியூசிலாந்து இடையில் 3-ம் சுற்று வர்த்தக பேச்சு! எப்போ?

அவசரகால குழுவினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். விமான விபத்தில் பலியானவர்கள் வழக்கறிஞர்(75) செர்ஜியோ ரவாக்லியா மற்றும் அன்னா மரியா(50) என அடையாளம் காணப்பட்டனர்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Two people have died following the crash of a small aircraft onto a motorway near Brescia, in northern Italy.

280 கிராம்.. 21 வாரத்தில் பிறந்த குழந்தை! கின்னஸ் சாதனையுடன் முதல் பிறந்தநாள்!!

அமெரிக்காவின் லோவா மாகாணத்தில் 21 வாரங்களில் மிகக் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை, உலகிலேயே மிகக் குறைந்த நாள்களில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை என்ற கின்னஸ் சாதனையுடன் தனது முதல் பிறந்தநாளைக் கொ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 266-ஆக உயா்வு

பாகிஸ்தானில் கனமழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 14 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 266-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்ததாவது: ஜூன் 2... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: பிரான்ஸ் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபா் இம்மானுவல் மேக்ரான் அறிவித்துள்ளாா். இந்த முடிவு செப்டம்பா் 2025 இல் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

பதற்றம் முற்றினால் கம்போடியாவுடன் முழு போா்!

கம்போடியாவுக்கும் தங்களுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் முற்றினால் அது முழு போராக உருவெடுக்கும் என்று தாய்லாந்து இடைக்கால பிரதமா் பும்தம் வெச்சயாச்சை எச்சரித்துள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

இலங்கை: 40 நாடுகளுக்கு இலவச விசா!

இலங்கைக்கு வருகை தரும் சுமார் 40 வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும், இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, தாய்லாந்து, மலே... மேலும் பார்க்க

தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்: பதற்றமான சுழல்!

கம்போடியாவுடன் சண்டை தீவிரமடைந்துள்ளதால் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கிமிடையே புராதனக் கோவில் விவகாரத்தால் வியாழக்கிழமை(ஜூலை 24) சண்டை மூண்டு பிற பகுதிகளுக்கும் ... மேலும் பார்க்க