செய்திகள் :

"ரூ.5000 டு ரூ.46 லட்சம் சம்பளம்; என் அம்மாதான் எனக்கு ஹீரோ" - தாயின் தியாகம் குறித்து நெகிழும் மகன்

post image

தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தான் மாதம் ரூ. 5,000 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆண்டுக்கு ரூ. 46 லட்சம் உயர்ந்திருப்பதாகவும், தன்னுடைய இந்த வளர்ச்சியில் தனது தாயார் எவ்வளவு முக்கியமானவர் என்பதையும் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்திருக்கிறார்.

ரெட்டிட் தளத்தில், "35M | My First Salary Was Rs 5,000. 10 Years Later, It’s 46 LPA – Here’s My Story" என்ற தலைப்பில் தனது வாழ்க்கையை சுருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

IT Sector - ஐ.டி துறை
IT Sector - ஐ.டி துறை

அந்தப் பதில் அவர், "நான் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய பெற்றோர் தினசரி விவசாய கூலிகள். வாழ்க்கை கடுமையானதாக இருந்தது. நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம்.

எனக்கு ஏழு வயது இருக்கும்போது என்னுடைய பெற்றோர் என்னையும், என் சகோதரனையும் விட்டு நல்ல வேலைவாய்ப்புக்காக எங்கள் கிராமத்திலிருந்து பெங்களூருவுக்குச் சென்றனர்.

பெங்களூருவில் என் அம்மா நிறைய வேலைகள் பார்த்தார். பல வீடுகளில் வீட்டு வேலை செய்தார். கார்மெண்ட்ஸ்களில் டெய்லராக வேலை செய்தார்.

அவரின் கைகள் எப்போதும் நிறைந்திருக்கும். ஆனால், அவரின் இதயம் அதைவிடவும், அன்பாலும், எங்களின் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற மன உறுதியாலும் நிறைந்திருந்தது. அவர்தான் என் உண்மையான ஹீரோ.

அதேநேரத்தில், கிராமத்தில் என் பாட்டி எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்.

இருப்பதைக் கொண்டு என்னையும், என் சகோதரனையும் பாசத்துடன் ஒழுக்கமானவர்களாக வளர்த்தார்.

ரெட்டிட் போஸ்ட்
ரெட்டிட் போஸ்ட்

அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பை நாங்கள் முடித்தோம். எங்களின் இலக்குகளை ஒருபோதும் சூழ்நிலைகள் நிர்ணயிக்க அனுமதிக்கவில்லை.

உயர் கல்விக்குப் பிறகு, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நான் சேர்ந்தேன். அதுதான் நான் சேர நினைத்த கனவுக் கல்லூரி என்பதால் அங்கு சேரவில்லை. அங்குதான் தேவையான இலவச விடுதி வசதி இருந்தது.

இருப்பினும், அந்தக் கல்லூரியில் டாப் மாணவர்களில் ஒருவனாக உயர்ந்தேன். அப்போதுதான் கடின உழைப்பு மற்றும் ஒரு விஷயத்தில் கவனம் சிதறாமல் செயல்படுவதன் சக்தியை நான் உணர்ந்தேன்.

பின்னர், பி.டெக் படிப்பில் சேர்ந்தேன். என் மூத்த சகோதரன் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃ ப் இந்தியா நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

அவரின் சப்போர்ட்டால் எனது பொறியியல் படிப்பை முடித்தேன். அதற்காக எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.

பி.டெக் முடித்த பிறகு ஜூனியர் வெப் டெவலப்பராக மாதம் ரூ. 5,000 சம்பளத்துக்கு முதல்முறையாக வேலைக்கு சேர்ந்தேன்.

இது தொடக்கம்தான் என்று எனக்குத் தெரியும். வெப் டெவலப்பிங்கில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.

ஒவ்வொரு சவால்களிலும் கவனம் சிதறாமல் கற்றுக்கொண்டே இருந்தேன்.

ரெட்டிட் போஸ்ட்
ரெட்டிட் போஸ்ட்

இன்று இதே துறையில் 10 ஆண்டுகள் அனுபவத்துடன் ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் சம்பாதிக்கிறேன்.

தொடங்கிய இடத்தை நினைத்துப் பார்க்கையில் கனவுபோல் இருக்கிறது.

இத்தனை வருடங்களில் 5 ஏக்கர் நிலம் வாங்கிவிட்டோம். சொந்த வீடு கட்டிவிட்டோம். கார்கூட வாங்கியிருக்கிறோம்.

திரும்பிப் பார்க்கும்போது இந்தப் பயணம் அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை.

ஒவ்வொரு கஷ்டமும், நான் இன்று இருக்கும் நிலைமைக்கு என்னை செதுக்கியிருக்கிறது.

இவையனைத்துக்கும் என் குடும்பத்துக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

குறிப்பாக என்னுடைய அம்மா, பாட்டி மற்றும் சகோதரனுக்கு. என்னுடைய அம்மாவின் தியாகங்கள்தான் இவையனைத்துக்கும் அடித்தளம்.

எப்போதும் அவர்தான் எனக்கு ஹீரோ" என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருந்தார்.

IT Sector - ஐ.டி துறை
IT Sector - ஐ.டி துறை

மேலும், தனது இந்தப் பதிவுக்கு வந்த கமெண்டுகளுக்குப் பதிலளித்த அந்த நபர், "ஆண்டுக்கு ரூ. 46 லட்சம் என்பது சாதாரணமானது என்று சிலர் கூறுகிறார்கள்.

ஆனால், எனக்கும் என் குடும்பத்துக்கும் மிகப்பெரிய சாதனை. நான் எவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன்.

இனிவரும் காலங்களில் இன்னும் அதிகமாக சாதிக்க உறுதியுடன் இருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

Sundar Pichai: சொத்து மதிப்பு 9000 கோடியாக உயர்வு; வியக்க வைக்கும் சுந்தர் பிச்சையின் வளர்ச்சி!

ஆல்பபெட் தலைமைச் செயல் அதிகாரியான (ceo) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக கடந்த 2015-ல் பொறுப்பேற்ற சுந்தர் பி... மேலும் பார்க்க

`கையெழுத்துக்காக அறையில் பூட்டி கட்டாயப்படுத்தினர்!' - கரிஷ்மா கபூர் முன்னாள் கணவரின் தாயார் புகார்!

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு லண்டனில் காலமானார். அவர் மறைவை தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கம்பெ... மேலும் பார்க்க

Zepto: மறைமுக கட்டணமா? - `COD டெலிவரியில் இதான் நடக்கிறது' - மார்க்கெட்டிங் நிபுணர் சொல்வதென்ன?

பிரபல விரைவு வர்த்தக தளமான ஜெப்டோ, கேஷ் ஆன் டெலிவரி (COD) ஆர்டர்களில் மறைமுகமாக கட்டணம் விதிப்பதாகவும், இதை வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெங்களூருவைச... மேலும் பார்க்க

மும்பை: தொடர் ரயில் குண்டுவெடிப்பு; 12 குற்றவாளிகளை விடுவிக்கும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 180 பேர் வரை உயிரிழந்தனர். 700 பேர் காயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சிங்கப்பூர்: ஏர்போர்ட் கடைகளில் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு - சிக்கிய இந்தியர்

சிங்கப்பூர் ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள 14 கடைகளில் இருந்து பைகள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 38 வயது இந்தியர் ஒருவர் திருடியதாக அந்நாட்டு காவ... மேலும் பார்க்க

AI -பேச்சால் ஈர்க்கப்பட்டு, மனைவியிடம் விவாகரத்து கேட்ட 75 வயது முதியவர் - சீனாவில் நடந்த சம்பவம்

சீனாவில் 75 வயதான முதியவர் ஒருவர், ஆன்லைனில் பார்த்த ஒரு "பெண்ணின்" பேச்சால் ஈர்க்கப்பட்டு, தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார்.அந்தப் "பெண்" ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அவருக்கு தெரியவில்லை... மேலும் பார்க்க