கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: கைதானவரை அடையாளம் காட்டினாரா சிறுமி?
Zepto: மறைமுக கட்டணமா? - `COD டெலிவரியில் இதான் நடக்கிறது' - மார்க்கெட்டிங் நிபுணர் சொல்வதென்ன?
பிரபல விரைவு வர்த்தக தளமான ஜெப்டோ, கேஷ் ஆன் டெலிவரி (COD) ஆர்டர்களில் மறைமுகமாக கட்டணம் விதிப்பதாகவும், இதை வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்தவர் சுமுக் ராவ். ஃப்ரிடோ நிறுவனத்தில் மார்க்கெட்டிங் நிபுணராக பணியாற்றும் இவர், ஜெப்டோவின் இந்த நடைமுறையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். அவரது நண்பர் ஆன்லைனில் பணம் செலுத்த முயன்றபோது, ஆர்டர்கள் தானாகவே COD முறைக்கு மாறியதாகவும், இதனால் இந்த சிக்கல் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

இது தொழில்நுட்ப கோளாறா?
X தளத்தில் இதுகுறித்து பகிர்ந்த ராவ், ஜெப்டோ தங்களின் ஆர்டர் திரையில் தந்திரமான விஷயத்தை செய்வதாக குற்றம்சாட்டினார்.
”முன்பு ’ஆன்லைன் பே’என்ற விருப்பம் முதன்மையாக இருந்த இடத்தில், இப்போது ’கேஷ்/யுபிஐ ஆன் டெலிவரி’ என்று மாற்றப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பழக்கத்தைப் பயன்படுத்தி, அவர்களை அறியாமல் COD விருப்பத்தை தேர்ந்தெடுக்க வைக்கிறது.
முதலில் இது பாதிப்பில்லாததாக தோன்றலாம். டெலிவரி நபரிடம் யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம் என்று நினைப்பீர்கள். ஆனால், அப்படி இல்லை. இங்குதான் டார்க் பேட்டர்ன் தொடங்குகிறது.
COD முறையில் ஆர்டர் செய்யும்போது, ஜெப்டோ தானாகவே 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி என்ற ’கேஷ் ஹேண்ட்லிங் கட்டணத்தை’ சேர்க்கிறது. ஆனால், இந்தக் கட்டணம் ஆர்டர் செய்யும் முன் இறுதி இன்வாய்ஸில் காட்டப்படுவதில்லை. ஆர்டர் செய்யப்பட்ட பிறகு, சில வினாடிகளில் மட்டுமே இது தோன்றுகிறது” என்று அவர் கூறியிருக்கிறார்.
"விரைவு வர்த்தக செயலியில் இந்தக் கட்டணத்திற்கு என்ன அவசியம்?" என்று கேள்வி எழுப்பிய அவர், ஜெப்டோவின் இந்த நடைமுறையை "மோசமான பயிற்சி" என்றும் விமர்சித்திருக்கிறார்.
A few days back, @ShachiGambhir told me her Zepto orders automatically started getting placed as COD instead of the usual online payment method. I ignored it at first, but then realized how it's yet another shady practice.
— Sumukh Rao (@RaoSumukh) July 23, 2025
Zepto has changed its default CTA on the order screen to… pic.twitter.com/8ugiTNsA2a