தேஜஸ்வியைக் கொல்ல பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சதி: ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டு
இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் முதல் ஹல்க் ஹோகன் உயிரிழப்பு வரை | ஜூலை 24 ரவுண்ட்அப்
இன்றைய நாளின் (ஜூலை 24) முக்கியச் செய்திகள்!
* இங்கிலாந்தில் பிரதமர் மோடி மற்றும் அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் இரு நாடுகளுக்குமிடையே ஃப்ரீ ட்ரேட் ஒப்பந்தம் (Free Trade Agreement - FTA) இன்று (ஜூலை 24) கையெழுத்தானது.
* நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக எம்.பி-க்கள் வைகோ, அன்புமணி ராமதாஸ், எம்.எம். அப்துல்லா, பி. வில்சன், எம். சண்முகம், என். சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக் காலம் இன்றோடு (ஜூலை 24) நிறைவடைந்தது.

* கர்நாடகாவில் 79 வயது ஓய்வுபெற்ற மருத்துவர் எச்.எம். வெங்கடப்பா என்பவர், தான் படித்த அரசுப் பள்ளிக்கு ரூ.14 கோடி கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டிக் கொடுத்திருக்கிறார்.
* மதிமுக தலைவர் வைகோ-வுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்றோடு எம்.பி பதவிக்காலம் முடிந்த நிலையில், "பாஜக கூட்டணிக்கு வந்தால் மீண்டும் எம்.பி ஆகலாம்" என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மாநிலங்களவையிலேயே அழைப்பு விடுத்தார்.
* 2018-ல் குன்றத்தூரில் இரண்டு குழந்தைகளைக் கொன்ற வழக்கில் கைதான தாய் அபிராமி மற்றும் அவரின் ஆண் நண்பர் மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு நீதிபதி செம்மல் `சாகும் வரை சிறை' என ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
* ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் தமிழகத்துக்கு பிரதமர் மோடி வரவிருக்கும் நிலையில், தங்களைச் சந்தித்தால் பாக்கியம் எனத் தமிழக முன்னாள் முதல்வரும், எம்.எல்.ஏ-வுமான ஓ. பன்னீர்செல்வம் நேரில் சந்திக்க அனுமதி வேண்டி பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

* சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மாதம் நகை திருட்டு புகாரில் போலீஸார் தாக்குதலில் அஜித் குமார் என்பவர் உயிரிழந்த வழக்கில், நகை திருடுபோனதாகப் புகாரளித்த நிகிதாவிடம் சிபிஐ இன்று 3 மணிநேரம் விசாரணை நடத்தியது.
* ரஷ்யாவில் அங்காரா விமான நிறுவனத்தின் அன்டோனோவ் An-24 என்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானக் குழுவினர் 6 பேர் மற்றும் 43 பயணிகள் என விமானத்தில் பயணித்த 49 பேரும் உயிரிழந்தனர்.

* மான்செஸ்டரில் நடைபெற்றுவரும் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் காலில் காயமடைந்த இந்திய வீரர் ரிஷப் பண்ட், இரண்டாம் ஆட்டத்தில் காயத்துடன் களமிறங்கி அரைசதம் அடித்து அவுட்டானார். முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
* பிரபல WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (71 வயது) அமெரிக்காவில் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.