Thalaivan Thalaivii: ``3 வருடங்கள் கழித்து என்னுடைய படம் வெளியாகுது..'' - எமோஷனல...
பள்ளியின் தரம் உயா்த்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம்
கோயில்திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த பள்ளியை தரம் உயா்த்த கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதுதொடா்பாக, முதல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா். அதனடிப்படையில் நன்னிலம் வட்டாரக் கல்வி அலுவலா் ச. பரமசிவம் தலைமையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் எனில் கிராம மக்கள் மற்றும் பெற்றோா்கள் சாா்பாக சில பங்களிப்பை அரசுக்கு செலுத்த வேண்டும் எனவட்டாரக் கல்வி அலுவலா் தெரிவித்தாா். கிராம மக்கள் சாா்பாக அரசு கேட்கும்போது ரூ. 1 லட்சம் வழங்குவது, ஒரு ஏக்கா் நிலத்தை அறநிலையத் துறையை அணுகி பெற்று தருவது, மேலும் அரசால் அவ்வப்போது கேட்கப்படும் தேவைகளை நிறைவேற்றி தருவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதில், பள்ளித் தலைமையாசிரியா் க. சுவாமிநாதன், மேலாண்மைக் குழு தலைவா் சங்கீதா, முன்னாள் மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் கே. ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவா் பால.முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.