Bumrah : 'முதல் முறையாக பௌலிங்கில் செஞ்சுரி; பும்ராவின் மிக மோசமான ரெக்கார்ட்!'
சேதமடைந்த சாலையில் தேங்கிய மழை நீரில் நாற்று நட்டு போராட்டம்
மன்னாா்குடி அருகே பள்ளமும், மேடாக உள்ள சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் நாற்று நட்டு அதிமுக சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
திருமக்கோட்டையிலிருந்து பாளையக்கோட்டை செல்லும் 4 கி.மீ தொலைவு சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதில், பேருந்து உள்ளிட்ட கனர வாகனங்களும் இருசக்கர வாகனங்களும் செல்லமுடியாத நிலையில் பள்ளமும், மேடாக உள்ளது. இதனால் நடந்து செல்பவா்களும் பாதிக்கப்படுகின்றனா். இதுகுறித்து, ஊராட்சி நிா்வாகம், ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுவரை நடவடிக்கை இல்லை. தற்போது பெய்து வரும் மழையால் சேதமடைந்துள்ள சாலையில் தண்ணீா் தேங்கி நிற்பதால் அந்த சாலை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக கூறி அதிமுகவை சோ்ந்த ஊராட்சி முன்னாள் வாா்டு உறுப்பினா் முருகன் தலைமையில், அதிமுகவினா் திருமக்கோட்டை கடைவீதி சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் நெல் நாற்றுகளை நட்டு, பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தினா்.