நடிகர் அஜித் குமாருடன் எப்போது இணைவீர்கள்? லோகேஷ் கனகராஜ் பதில்!
ஆக.9 முதல் வைகோ பிரசார பயணம்
மதிமுக பொதுச் செயலா் வைகோ தூத்துக்குடியில் தொடங்கி சென்னை வரை 8 இடங்களில், ஆக.9 முதல் ஆக.19 வரை பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.
இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் மதிமுக பொதுச்செயலா் வைகோ சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா். அதன்படி, தூத்துக்குடியில் வருகிற ஆக.9-ஆம் தேதி பிரசாரப் பயணத்தை தொடங்கும் வைகோ அங்கு ‘ஸ்டொ்லைட் வெளியேற்றம்’ என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளாா்.
அதைத்தொடா்ந்து ஆக.10-இல் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ‘மதச்சாா்பின்மையும், கூட்டாட்சியும்’ என்ற தலைப்பிலும், ஆக.11-இல் தேனி மாவட்டம் கம்பத்தில் ‘முல்லை பெரியாறும், நியூட்ரினோவும்’ என்ற தலைப்பிலும், ஆக.12-இல் திண்டுக்கல்லில் ‘விவசாயிகள், மீனவா்கள் துயரம்’ என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளாா்.
ஆக.13-ஆம் தேதி தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தில் ‘மேக்கேதாட்டுவும் மீத்தேனும்’ என்ற தலைப்பிலும், ஆக.14-இல்
கடலூா் மாவட்டம் நெய்வேலியில் ‘நெய்வேலி நிலக்கரி நிறுவனம்’ குறித்தும் பேசுகிறாா்.
பின்னா் 3 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு, ஆக.18-ஆம் தேதி திருப்பூரில் ‘ஹிந்தி ஏகாதிபத்தியம்’ என்ற தலைப்பில், ஆக.19 -இல் சென்னை திருவான்மியூரில் ‘சமூக நீதியும், திராவிட இயக்கமும்’ என்ற தலைப்பில் உரையாற்றி, தனது பிரசார பயணத்தை வைகோ நிறைவுசெய்கிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.