நட்சத்திர பலன்கள்: ஜூலை 25 முதல் ஜூலை 31 வரை #VikatanPhotoCards
மான்செஸ்டர் டெஸ்ட்: 173 பந்தில் 1 முறை மட்டுமே வேகமாக (140கி.மீ./மணி) பந்துவீசிய பும்ரா!
மான்செஸ்டர் டெஸ்ட்டில் இந்தியாவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா வேகமாக (140கி.மீ./மணி) பந்துவீசாதது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருக்கிறது. தற்போது, 4-ஆவது டெஸ்ட் மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் மூன்றாம் நாள் முடிவில் 544/7 ரன்களை எடுத்துள்ளது.
பும்ரா களத்தில் நொண்டிக்கொண்டே இருந்த காட்சிகளும் இந்திய ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தது.
ஹெடிங்லே, லார்ட்ஸ் திடலில் வேகமாகப் பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா ஓல்ட் டிராஃபோர்டில் ஒரே முறை மட்டுமே 140கி.மீ./மணி வேகத்திற்கும் அதிகமாக பந்துவீசியது அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கெனவே, பும்ராவுக்கு பணிச்சுமை இருப்பதாகக் கூறப்பட்டது. இருப்பினும், இந்தப் போட்டி முக்கியமானது என்பதால் ஓய்வெடுக்காமல் விளையாடி வருகிறார்.
இந்தத் தொடரில் 140கி.மீ./மணி வேகத்திற்கும் அதிகமாக பும்ரா பந்துவீசிய விவரங்கள்
ஹெடிங்லே: 266 பந்தில் 106 முறை, 39.84 சதவிகிதம்
லார்ட்ஸ்: 257 பந்தில் 69 முறை, 26.84 சதவிகிதம்
ஓல்ட் டிராஃபோர்ட்: 173 பந்தில் 1 முறை, 0.57 சதவிகிதம்
படிப்படியாக பும்ராவின் வேகம் குறைந்துக்கொண்டே வரும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.