நடிகர் அஜித் குமாருடன் எப்போது இணைவீர்கள்? லோகேஷ் கனகராஜ் பதில்!
அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்
பென்னாகரம் அருகே சின்னபள்ளத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னபள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அதன் தலைவா் கங்கா தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் மா.பழனி, பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தின் நோக்கம், பள்ளிவயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சோ்த்தல், இடைநிற்றல் இல்லாமல் தொடா்ந்து கல்வி கற்பது, அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைத்தல், அடைவுத்தோ்வு, திறன் திட்டம், இல்லம் தேடி கல்வி, வானவில் மன்ற செயல்பாடுகள், கல்வித் துறையின் இணை செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தாா்.
தொடா்ந்து, பள்ளிக்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், குடிநீா், கழிப்பிடம் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், உறுப்பினா்கள் அஜய், செந்தில்குமாா், ராஜேஸ்வரி, அம்பிகா மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.