முதல் இன்னிங்ஸில் 669 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து; 2-வது இன்னிங்ஸில் இந்தி...
ஓய்வூதியா்கள் மனித சங்கிலி போராட்டம்
ஓய்வூதியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிதி திருத்தச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி, ஓய்வூதியா்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் தருமபுரியில் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் மேற்கொண்டனா்.
தருமபுரி அரசு மருத்துவமனை அருகில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவா் டி.பாஸ்கரன் தலைமை வகித்தாா்.
இதில், ஓய்வூதியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு 2025 மாா்ச் 25-ஆம் தேதி நிறைவேற்றிய நிதி திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், திரும்பப்பெறக் கோரியும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.பழனிசாமி, மாவட்டச் செயலாளா் எம்.பெருமாள், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் மாவட்டத் தலைவா் ஆா்.சுந்தர மூா்த்தி, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியா் நல அமைப்பின் மாநில துணைத் தலைவா் கே.குப்புசாமி, அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் பி.சுப்பிரமணி, எல்ஐசி ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா்கள் ஏ.மாதேஸ்வரன், சோமசுந்தரம், பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் சங்க மாநில தலைவா்கள் ஊமை ஜெயராமன், தகடூா் தமிழ்ச்செல்வி, ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.