செய்திகள் :

முதல் இன்னிங்ஸில் 669 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து; 2-வது இன்னிங்ஸில் இந்தியா திணறல்!

post image

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 669 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் ஜோ ரூட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இருவரும் சதம் விளாசி அசத்தினர். ஜோ ரூட் 150 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களும் எடுத்தனர். பென் டக்கெட் (94 ரன்கள்), ஸாக் கிராலி (84 ரன்கள்), ஆலி போப் (71 ரன்கள்) எடுத்தனர்.

இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ் மற்றும் முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 311 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்தியா தடுமாற்றம்

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் போட்டியின் நான்காம் நாளான இன்று (ஜூலை 26) அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இந்திய அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளிக்க, அடுத்து களம் கண்ட தமிழக வீரர் சாய் சுதர்சனும் அவர் சந்தித்த முதல் பந்திலேயே 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

உணவு இடைவேளையின்போது, இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழலில் உள்ளது.

இதையும் படிக்க: பேட்டிங் செய்வது இன்று மிகவும் எளிதாகிவிட்டது; கெவின் பீட்டர்சன் கூறுவதன் காரணம் என்ன?

England were bowled out for 669 in the first innings of the fourth Test against India.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை; செப்.14-ல் இந்தியா - பாக். மோதல்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர்: 3 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி. த்ரில் வெற்றி!

முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூஸிலாந்து த்ரில் வெற்றி பெற்றது. New Zealand vs South Africa, Final - New Zealand won by 3 runs மேலும் பார்க்க

விராட் கோலி ஐபிஎல் கோப்பையை வென்றதில் மிக்க மகிழ்ச்சி: கிறிஸ் கெயில்

நீண்ட ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பைக்கான தேடலில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்று... மேலும் பார்க்க

கே.எல்.ராகுல் - ஷுப்மன் கில் இணை நிதான ஆட்டம்: பரபரப்பான கட்டத்தில் 4-ஆவது டெஸ்ட்!

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நான்காம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா ... மேலும் பார்க்க

பும்ரா தோற்றுவிட்டார், விரைவில் ஓய்வை அறிவிக்கலாம்: முன்னாள் இந்திய வீரர்

இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா விரைவில் ஓய்வை அறிவிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் க... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: இந்தியா- பாக். இடையே 3 போட்டிகள்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 முறை நேருக்குநேர் சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் ஆரம்பமாகும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவு... மேலும் பார்க்க