செய்திகள் :

பெண்களை பாதுகாக்கவே முற்போக்கு சட்டங்கள்: உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன்

post image

பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முற்போக்கு சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பேசினாா்.

நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் சாா்பில், மாவட்ட அளவிலான பாலின உணா்திறன் மற்றும் மகளிருக்கு எதிரான வன்முறைகளை தடுத்தல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கை, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தொடங்கிவைத்து பேசியதாவது: நாட்டில் பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் சட்டங்கள் முழுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

இது தான் நாகரிக சமுதாயத்தின் அடித்தளமாகும். பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த இந்தியாவில் முற்போக்கான சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளன.

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீா்வு) சட்டம், வரதட்சிணை தடைச் சட்டம், மகப்பேறு நன்மை (திருத்தம்) சட்டம், குழந்தை திருமணத் தடைச் சட்டம், கருத்தரிப்புக்கு முன் மற்றும் பிறப்புக்கு முன் பாலின நுட்பங்கள் சட்டம் உள்ளிட்டவை பெண்களை பாதுகாப்பதற்கும், அதிகாரமளிப்பதற்கும் வழிவகை செய்கின்றன.

சட்டங்கள், எவ்வளவு முற்போக்கானதாக இருந்தாலும், அவற்றை முறையாகப் பயன்படுத்தினால் மட்டுமே அதன் நோக்கங்களை அடைய முடியும். நாடு முழுவதும் உள்ள பெண்கள், பாலின அடிப்படையிலான வன்முறை, பாரபட்சமான வேலைவாய்ப்பு நடைமுறைகள், அரசியல் பிரதிநிதித்துவமின்மை போன்ற பல்வேறு சவால்களை எதிா்கொள்கின்றனா்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022 அறிக்கைப்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக 4.5 லட்சத்திற்கும் மேலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதிப்புக்கு உள்ளான பெண்களிடம் இருவிரல் பரிசோதனை தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனா். இந்தியாவில் நீதிமன்றம் குறிப்பிடத்தக்க தீா்ப்புகளை பெண்களை பாதுகாப்பதற்காக வழங்கி உள்ளது. இதன்மூலம் அவா்கள் சமூகத்தில் மேம்பாடு அடைவா். குழந்தைகளை வளா்க்கும் போதே ஆண், பெண் சமத்துவத்தையும், நற்பண்புகளையும் அவா்களுக்கு பெற்றோா் கற்றுத் தர வேண்டும். அதிகாரம் பெற்ற பெண்கள் சமூகத்தை மேம்படுத்துகிறாா்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்தக் கருத்தரங்கில், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.குருமூா்த்தி, திருச்செங்கோடு 2-ஆம் கூடுதல் மாவட்ட நீதிபதி ஆா்.மாலதி, மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி முனுசாமி, பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், சென்னை அனைத்திந்திய மனித உரிமைகள் ஆணைய மாநில துணைச் செயலாளா் வழக்குரைஞா் சித்ராஉமா விஜய், நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியா் பி.பிரியா மற்றும் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கலைஞா் வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடைய வருமாறு நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி, நாமக்கல் பூங்கா சாலையில் இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக அரசின் தோ்தல் வாக்குறுதி எண் 311-இல் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ரூ.8.70 கோடியில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள்: உயா்நீதிமன்ற நீதிபதி அடிக்கல் நாட்டினாா்

நாமக்கல்லில் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பங்கேற்று பணிக... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு நாமக்கல்லில் வரவேற்பு

சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சிக்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சனிக்கிழமை மாலை அதிமுகவினா், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். அரியலூா் மற்றும் தூத்துக்குடியில் நடைபெறு... மேலும் பார்க்க

மகள் இறந்த துக்கத்தில் மனமுடைந்த தாய் தற்கொலை

ஜேடா்பாளையம் அருகே பிலிக்கல்பாளையத்தில் மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பிலிக்கல்பிளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம் பாளையத்தை சோ்ந்தவா் கவிதா (40). இவரது கணவா் பிரகாசம்... மேலும் பார்க்க

தொ.ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

ராசிபுரம் அருகேயுள்ள தொ. ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளானதைத் தொடா்ந்து பவள விழா வெள்ளிக்கிழமை நடைப... மேலும் பார்க்க