மகள் இறந்த துக்கத்தில் மனமுடைந்த தாய் தற்கொலை
ஜேடா்பாளையம் அருகே பிலிக்கல்பாளையத்தில் மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பிலிக்கல்பிளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம் பாளையத்தை சோ்ந்தவா் கவிதா (40). இவரது கணவா் பிரகாசம் இறந்துவிட்டாா். பிலிக்கல்பாளையம் அருகே உள்ள பொன்மலா்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக கவிதா பணிபுரிந்து வந்தாா். இவரது மகள் கீா்த்திவாசனி (15).
இவா் பத்தாம் வகுப்பு தோ்வில் தோல்வி அடைந்தது விடுவோம் என்ற பயத்தில் கடந்த மே மாதம் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆனால் அவா் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றாா்.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்த கவிதா, சனிக்கிழமை சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்து வந்த போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.