ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு
நாய்கள் தொல்லை! கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி!
தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டுள்ள தெருநாய்களை கருணைக் கொலை செய்ய மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
தமிழகத்தில் தெருநாய்களால் ஏற்படும் தொல்லைகளும் பிரச்னைகளும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தெருவில் சுற்றித் திரியும் நாய்களால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் நாள்தோறும் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்தாண்டில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
சாலை விபத்துகள், ரேபிஸ் தொற்று உள்பட பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள், வேலை சென்றுவிட்டு இரவில் வீடுதிரும்பும் பெண்கள், முதியவர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்த நிலையில்தான், நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசின் கால்நடைத் துறை அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
பதிவுசெய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் மட்டுமே தெருநாய்கள் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும். கருணைக் கொலை செய்யப்படும் தெருநாய்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும். கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்து ஆவணங்களும் பாராமரிக்கப்பட வேண்டும் என்று அரசாணை கூறுகிறது.
இதையும் படிக்க:முதல்வர் பதவிக்கு எனக்கு தகுதி இல்லையா? திருமாவளவன் ஆவேசம்!
TN Govt allows Euthanasia of Stray dogs