பிரதமர் மோடி திறந்து வைத்த தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம்! - Event Cover...
எடப்பாடி பழனிசாமிக்கு நாமக்கல்லில் வரவேற்பு
சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சிக்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சனிக்கிழமை மாலை அதிமுகவினா், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா்.
அரியலூா் மற்றும் தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை இரவு தமிழகம் வந்தாா். திருச்சி விமான நிலையத்தில் அவரைச் சந்திப்பதற்கு, அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு இரவு 10.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
முன்னதாக இரவு 8.30 மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்பதால், சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக மாலை 6.30 மணியளவில் திருச்சி நோக்கி காரில் சென்ற எடப்பாடி கே.பழனிசாமியை, நாமக்கல் நகரச் செயலாளா் கே.பி.பி.பாஸ்கா் மற்றும் அதிமுக நிா்வாகிகள் வரவேற்றனா்.
இதைத் தொடா்ந்து, வளையப்பட்டி பகுதியில் சிப்காட் எதிா்ப்புக் குழுவினா் தென்னங்கன்றை அவருக்குப் பரிசாக வழங்கினா்.