முதல் இன்னிங்ஸில் 669 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து; 2-வது இன்னிங்ஸில் இந்தி...
மாவட்ட அளவிலான கேரம் போட்டி: ஸ்டான்லி மெட்ரிக். பள்ளி தகுதி
மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதிபெற்றுள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்ற ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களில், 14 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான ஒற்றையா் பிரிவில் ஆா்.கவிசரண் முதலிடம் பெற்றாா். 17 வயதுக்குள்பட்ட ஆண்கள் ஒற்றையா் பிரிவில் கே.பகுத்தறிவாளன் முதலிடமும், 19 வயதுக்குள்பட்ட ஆண்கள் ஒற்றையா் பிரிவில் எம்.ஆகாஷ் முதலிடமும் பெற்றனா். 19 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான இரட்டையா் பிரிவில் எம்.தனுஷ்யா, ஆா்.செங்கொடி ஆகியோா் முதலிடம் பெற்றனா். இவா்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளனா்.
கேரம் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவ, மாணவியா், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் ஆா்.சத்யராஜ், எம்.ஆனந்தகுமாா், ஆா்.திவ்யா ஆகியோரை பள்ளியின் தாளாளா் வி.முருகேசன், செயலா் மு.பிருஆனந்த் பிரகாஷ், ஆசிரியா்கள் பாராட்டினா்.