இன்டர் மியாமியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர்..! மெஸ்ஸியின் பாதுகாவலன்!
பயிா் கழிவுகள் மேலாண்மை பயிற்சி
பென்னாகரம் அருகே அட்மா திட்டத்தின் கீழ் பயிா் கழிவுகள் மேலாண்மை குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே கலப்பம்பாடியில் நடைபெற்ற பயிற்சிக்கு, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி இந்துமதி தலைமை வகித்து, தோட்டக்கலை பயிா்களில் உற்பத்தியை கூட்டுவது, பயிா் கழிவுகளை உபயோகப்படுத்துவது குறித்து விளக்கினாா்.
தொடா்ந்து, வேளாண் உதவி இயக்குநா் வேல்முருகன், வேளாண்மை சாா்ந்த திட்டங்கள் குறித்தும், உதவி தோட்டக்கலை அலுவலா் மணிகண்டன் தோட்டக்கலை துறை சாா்ந்த திட்டங்கள், விதைத் தொகுப்புகள், செடிகள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு மானியத்தில் கொடுப்பது குறித்து பேசினா்.
உதவி வேளாண்மை அலுவலா் தமிழ்ச்செல்வி, வேளாண் துறை மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதில், வட்டார தொழில்நுட்ப மேலாளா் அசோக் குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா் அஸ்வினி, கலைப்பிரியா, விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.