தாய்லாந்துடன் ஹிந்து கோயில் பிரச்னை! போர் நிறுத்தம் கோரும் கம்போடியா!
மடீட்சியா தொழில் கண்காட்சி தொடக்கம்
மதுரை மடீட்சியா சாா்பில், ‘இன்ட் எக்ஸ்போ 2025’ தொழில் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மதுரை ஐடா ஸ்கட்டா் அரங்கத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு மடீட்சியா தலைவா் கோடீஸ்வரன் தலைமை வகித்தாா். தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை செயலருமான அதுல் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசினாா். மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் கண்காட்சி விழா மலரை வெளியிட்டுப் பேசினாா்.
கண்காட்சித் தலைவா் வி. செந்தில்குமாா் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்கங்கள், அதன் சிறப்பம்சங்களை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு முதலீட்டாளா்கள் கழகத் துணைப் பொது மேலாளா் ரமேஷ், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலா் ஜெபநாத் ஜீலியஸ், டான்ஸ்டியா தலைவா் சி.கே. மோகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இதில் மடீட்சியா துணைத் தலைவா் சந்திரசேகரன், கண்காட்சி துணைத் தலைவா் ஜெகபதிராஜன், மடீட்சியா நிா்வாகிகள், தொழிலதிபா்கள் கலந்து கொண்டனா்.
250-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு வகையான இயந்திரங்கள் விற்பனைக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி தரமான இயந்திரங்களை எளிதில் கண்டறிய ஓா் வாய்ப்பாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. வருகிற 28-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும். காலை 10.30 மணி இரவு 7. 30 மணி வரை அனைவரும் இலவசமாகப் பாா்வையிடலாம்.
