செய்திகள் :

Doctor Vikatan: குழந்தைகளுக்கும் ஓட்ஸ் கஞ்சி கொடுக்கலாமா, எந்த வயதிலிருந்து கொடுக்கலாம்?

post image

Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஓட்ஸ் கஞ்சி கொடுக்கலாமா, எந்த வயதிலிருந்து கொடுக்கலாம்.. எப்படிக் கொடுக்கலாம்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

குழந்தைகளுக்கும் ஓட்ஸை உணவாகக் கொடுக்கலாம். குழந்தை பிறந்து 6-வது மாதத்தில் இருந்து திட உணவுகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். அந்த வகையில், அவர்களுக்கு ஓட்ஸையும் அறிமுகப்படுத்தலாம்.

பிறந்து 6 மாதங்களான நிலையில், குழந்தைகளுக்கு ஓட்ஸ் உணவு கொடுப்பதானால், அது நன்றாக வெந்திருக்க வேண்டியது அவசியம். அதாவது ஓட்ஸை நன்கு வேகவைத்து கஞ்சி பதத்தில் நீர்க்க தயாரித்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். 9-வது மாதத்திலிருந்து  ஓட்ஸை வேகவைத்து இன்னும் சற்று கெட்டியான பதத்தில் கொடுக்கலாம்.

முதலில் வெறும் ஓட்ஸை மட்டும் அறிமுகப்படுத்திவிட்டு, பிறகு 9-வது மாதத்தில் இருந்து, ஓட்ஸ் சூப், காய்கறிகள் சேர்த்த ஓட்ஸ் கஞ்சி போன்றவற்றைக் கொடுக்கலாம். காய்கறிகளின் நற்பலன்களும் குழந்தைகளுக்கு கூடுதலாகக் கிடைக்கும்.

குழந்தைகளுக்குத் திட உணவுகளை அறிமுகப்படுத்தும்போது முதலில் எந்த உணவையும் தனியேதான் கொடுத்துப் பழக்க வேண்டும். பிறகுதான் அதை வேறு உணவுகளுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.  அந்த வகையில் ஓட்ஸுடன் பழங்கள் சேர்த்தும் கொடுக்கலாம். உதாரணத்துக்கு, ஓட்ஸுடன் மசித்த வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சேர்த்துக் கொடுக்கலாம்.

ஓட்ஸுடன் மசித்த வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சேர்த்துக் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஓட்ஸ் கொடுக்கும்போது எப்போதும் பிளெயின் ஓட்ஸாக இருக்கும்படி பார்த்து வாங்கிப் பயன்படுத்த வேண்டும். மசாலா ஓட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

ஓட்ஸை முதலில் வெறும் கடாயில் லேசாக வறுத்து, பிறகு பொடித்துக்கொள்ளவும். அந்தப் பொடியில் தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொடுக்கலாம்.

கேரட் கொடுக்க நினைத்தால், அதை வேகவைத்து, ஓட்ஸுடன் சேர்த்துச் சமைத்துக் கொடுக்கலாம். பழங்களையும் இதே முறையில் சேர்த்து, நீர்த்த கஞ்சி பதத்தில்தான் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் ஓரளவு வளர்ந்து, எல்லா திட உணவுகளுக்கும் பழக்கமான பிறகு ஓட்ஸை பருப்பு சேர்த்து கிச்சடி போலக்கூட செய்து கொடுக்கலாம். காய்கறிகள் சேர்த்து சாதம் செய்து கொடுப்பதுபோலவே ஓட்ஸில் செய்து கொடுக்கலாம்.

ஓட்ஸில் தோசை, சப்பாத்தி போன்றவற்றைக்கூட செய்து கொடுக்கலாம். 9 மாதங்களுக்கு மேலான குழந்தைகளுக்கு ஓட்ஸை பொடித்துச் சமைக்க வேண்டிய தேவையில்லை. ஓட்ஸை அப்படியே வேகவைத்துச் செய்து கொடுத்தாலே போதும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

ட்ரம்பிற்கு 'Chronic Venous Insufficiency' நோய் - ட்ரம்பின் பெர்சனல் மருத்துவர் கூறுவது என்ன?

வெள்ளை மாளிகையின் அறிக்கை படி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'Chronic Venous Insufficiency' என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் கரோலின் லீவிட், "சமீபத்திய வா... மேலும் பார்க்க

ஒவ்வொரு மாதமும் பெரிதாகும் மார்பகங்கள்; 22 வயது பெண்ணின் அரிய வகை பாதிப்பு; மருத்துவர்கள் விளக்கம்

பிரேசிலைச் சேர்ந்த 22 வயதான தைனாரா மார்க்கோண்டஸ் என்ற பெண் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மாதத்துக்கு ஒரு முறை அவரின் மார்பகங்கள் அளவில் பெரிதாகியிருக்கிறது. இதனால் அந்தப் பெண் கடுமையான வலியால்... மேலும் பார்க்க

Samosa and Jalebi: இனிமே சமோசாவும் ஜிலேபியும் சாப்பிடவே கூடாதா? - மருத்துவர் தரும் விளக்கம்

சாலையோரக் கடைகளில் நம் கண்ணெதிரே சுடச்சுட பொரித்து தரப்படும் சமோசாவும், ஜிலேபியும் பலருடைய ஆல் டைம் ஃபேவரிட் ஸ்நாக்ஸாக மாறி கிட்டத்தட்ட 20 வருடங்களாவது ஆகியிருக்கும். ஒரு கடி சமோசா, ஒரு கடி ஜிலேபி என ... மேலும் பார்க்க

Apollo: எனது உணவு, எனது ஆரோக்கியம்; 'மை ஃபுட் மை ஹெல்த்' என்ற நூலை வெளியிட்ட அப்போலோ

இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் நிறுவனமான அப்போலோ மருத்துவமனை [Apollo Hospitals], மருத்துவ ஊட்டச்சத்து சிகிச்சைக்கான [Medical Nutrition Therapy (MNT)] அதிகாரப்பூர்வமான, விரிவான வழிகாட... மேலும் பார்க்க

Health: முதிர்ந்த கீரையைவிட 40 மடங்கு அதிக சத்துகள் கொண்ட மைக்ரோ கீரைகள்!

ஊட்டச்சத்து மூலம் உடல்நலத்தை மேம்படுத்த விரும்பும் மக்கள் கீரைகளில், குறிப்பாக மைக்ரோ கீரைகளைப் பயன்படுத்துவதில் சமீபமாக அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கூட்டு, பொரியல், மசியல், தோசை, சப்பாத்தி, சாண்ட்விச... மேலும் பார்க்க

Flower Tea: பூக்களில் தேநீர்; எதில் என்ன மருத்துவப்பலன்? - சொல்கிறார் சித்த மருத்துவர்!

பூக்களில் தேநீர் போடுவது இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது. பூக்கள் டீ பேக் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கிறது. என்னென்ன பூக்களை பயன்படுத்தலாம்; எப்படி பயன்படுத்த வேண்டும்; அதிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய ப... மேலும் பார்க்க