ட்ரம்பிற்கு 'Chronic Venous Insufficiency' நோய் - ட்ரம்பின் பெர்சனல் மருத்துவர் கூறுவது என்ன?
வெள்ளை மாளிகையின் அறிக்கை படி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'Chronic Venous Insufficiency' என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் கரோலின் லீவிட், "சமீபத்திய வாரத்தில், அதிபர் ட்ரம்ப் காலின் கீழ் பகுதி வீங்கியிருந்தது. இதை பரிசோதித்தப்போது, அவருக்கு நாள்பட்ட சிரை பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது" என்று கூறியுள்ளார்.
நாள்பட்ட சிரை பாதிப்பு என்றால் என்ன?
கால்களில் உள்ள சிரை (Veins) ரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு அனுப்ப முடியாத நிலை தான் நாள்பட்ட சிரை பாதிப்பு என்று கூறுப்படுகிறது.
இது கால்களில் உள்ள நரம்புகள் பலவீனம் அடைவதால் அல்லது பாதிப்படைவதால் ஏற்படுகிறது.
இதனால், ரத்தம் பெரும்பாலும் கால்களிலேயே தங்கிவிடும். அது இதயத்தை நோக்கி செல்லாது.
இதன் அறிகுறி என்னென்ன?
கணுக்கால் அல்லது கீழ் காலில் வீக்கம்
வலி
விரிசுருள் சிரை நோய்
தோல் நிற மாற்றம்
அரிப்பு
கால் அல்சர்
எதனால் ஏற்படும்?
கர்ப்பம்
அதிக எடை
நீண்ட நேரம் அமர்ந்திருப்பது அல்லது நின்றுகொண்டே இருப்பது
மரபணு
கால்களில் காயம்
முதுமை

என்ன செய்ய வேண்டும்?
வாழ்க்கை முறை மாற்றுதல்
உடற்பயிற்சி
எடை குறைப்பு
போன்றவை இந்த நோயை சரி செய்யலாம்.
இது அவ்வளவு பெரிய நோயா?
இது மிகப்பெரிய நோய் இல்லை. சரியாக சிகிச்சை எடுத்துகொண்டால் பிரச்னை இருக்காது.
ட்ரம்பிற்கு இது எந்த அளவு உள்ளது?
ட்ரம்பின் மருத்துவர் சீன் பார்பபெல்லா, "அவருக்கு இந்த நோய் மிக தீவிரமாக இல்லை. அவருக்கு தமனி பிரச்னை, இதய கோளாறு, சிறுநீரக பிரச்னை உள்ளிட்ட எந்த தீவிர பிரச்னையும் இல்லை.
அவருக்கு இ.சி.ஜி எடுக்கப்பட்டது. அது அவர் நலமாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.