சிரியா உள்நாட்டு மோதலுக்கு புதிய போர்நிறுத்தம் அறிவிப்பு! வெளியேறும் அரசுப் படைக...
ஒவ்வொரு மாதமும் பெரிதாகும் மார்பகங்கள்; 22 வயது பெண்ணின் அரிய வகை பாதிப்பு; மருத்துவர்கள் விளக்கம்
பிரேசிலைச் சேர்ந்த 22 வயதான தைனாரா மார்க்கோண்டஸ் என்ற பெண் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மாதத்துக்கு ஒரு முறை அவரின் மார்பகங்கள் அளவில் பெரிதாகியிருக்கிறது. இதனால் அந்தப் பெண் கடுமையான வலியால் அவதிப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அந்தப் பெண் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், அவரது மார்பக அளவு வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் மீடியம் அளவிலான டி-ஷர்ட்களை அணிந்திருக்கிறார்.
ஒவ்வொரு மாதமும் சுமார் 750 கிராம் அளவுக்கு மார்பகங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆரம்பத்தில் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத, தைனாரா ஒரு நாள் கடைக்கு செல்லும்போது அவர் டி-ஷர்ட்டில் மறைத்து வைத்து பொருள்களை எடுத்துச் செல்வதாக கடைக்காரர்கள் எண்ணி உள்ளனர். அப்போதுதான் இது ஒரு அசாதாரண உணர்வு என்று அவர் புரிந்து கொண்டுள்ளார்.
அதன் பின்னர் அன்றாட வாழ்வும் அவருக்கு சவாலாக இருந்துள்ளது. முதுகு வலி, கழுத்து வலி ஏற்பட்டிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் இயல்பாக நடக்கும் விஷயங்களும் ஓடுவது, ஜிம்மிற்கு செய்வது போன்ற விஷயங்களும் அவரால் செய்ய முடியவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து அவர் மருத்துவரை அணுகியிருக்கிறார். அவர்கள் முதலில் இது புற்றுநோயாக இருக்கலாம் என்று எண்ணியுள்ளனர். அதற்கு பின்னர் அவர் ஜிகாண்டோமாஸ்டியா (Gigantomastia) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
ஜிகாண்டோமாஸ்டியா என்பது பெண்களின் மார்பகங்கள் அசாதாரணமாக பெரிய வளர்ச்சி அடையும் அரிய நிலையாகும். இது ஹார்மோன் சமநிலையின்மை, கர்ப்பம், உடல் பருமன் அல்லது சில மருந்துகளை எடுத்துக்கொள்வது போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளனர்.
அவருக்கு மார்பகத் திசுக்களை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. அறுவை சிகிச்சைகள் அவருக்கு செய்தாலும் தேவையான மருந்துகள் கொடுத்தாலும் திசு மீண்டும் வளரக்கூடியது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அந்தப் பெண் மேலும் மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.