விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
தொடரும் 2025-இன் அதிசயம்: இத்தாலி விளையாட்டு உலகிற்கு பொற்காலம்!
இத்தாலி நாட்டிற்கு இந்தாண்டு (2025) விளையாட்டு உககில் பொன்னான ஆண்டாக இருந்து வருகிறது.
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், கார்பந்தயன் என இத்தாலிக்கு இந்தாண்டு விளையாட்டுகளில் பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
விளையாட்டு உலகில் 2025 பல அதிசயங்களை நிகழ்த்தி வருகின்றன. அதன் வரிசையில் இத்தாலியும் இணைந்துள்ளது.
கார்பந்தயம்
சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலி வீரர் கிமி அன்டோனெல்லி கனடா கிராண்ட்பிரிக்ஸில் மூன்றாவது இடம் பிடித்து (பொடியம்) சாதனை படைத்தார்.
டென்னிஸ்
இத்தாலியின் யானிக் சின்னர் முதல்முறையாக விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் படத்தை வென்றார்.
இருமுறை விம்பிள்டன் வென்ற கார்லோஸ் அல்கராஸை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தினார்.
கிரிக்கெட்
இத்தாலி ஆடவர் அணி முதல்முறையாக டி20 உலகக் கோப்பைக்கு (2026) தகுதி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
கால்பந்து
மகளிர் யூரோ 2025-இல் 28 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.