எழும்பூா் ரயில் நிலையத்துக்குள் ரூ.1.50 லட்சம் கஞ்சா பறிமுதல்
ஜெய்ப்பூரில் தந்தையால் ஆழ்துளை கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடல் மீட்பு
ஜெய்ப்பூரில் தந்தையால் ஆழ்துளை கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உடல்நிலை சரியில்லாமல் இறந்த ஒரு வயது குழந்தையின் உடலை அவரது தந்தை லலித் ஆழ்துளை கிணற்றில் புதன்கிழமை இரவு வீசியுள்ளார். இதுகுறித்து தகவல் கிடத்ததும் போலீஸார், வெள்ளிக்கிழமை காலை, கயிறு மற்றும் கொக்கி உதவியுடன் குழந்தையின் உடலை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜாம்வா ராம்கர் காவல் நிலைய அதிகாரி ராம்பால் சர்மா கூறுகையில், குழந்தை இறப்புக்கான காரணம் மற்றும் நேரத்தை அறிய உடற்கூராய்வுக்காக உடல் அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புதன்கிழமை இரவு, லலித் தனது குழந்தையுடன் மருத்துவரைச் சென்று பார்த்திருக்கிறார்.
ஆனால், குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
பின்னர், குழந்தை இரவில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இறப்புக்குப் பிறகு, மகனின் உடலை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி, பின்னர் அதை ஆழ்துளைக் கிணற்றில் தந்தை வீசியுள்ளார். லலித்தின் சகோதரர் மற்றும் வேறு சில குடும்ப உறுப்பினர்களிடமிருந்து போலீஸார் வாக்குமூலங்கள் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மனைவி விட்டுச் சென்ற பிறகு மகனின் உடல்நிலை குறித்து மன உளைச்சலில் இருந்ததாக லலித் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.