சிக்கலில் சின்னசாமி மைதானம்! ஆர்சிபி கூட்ட நெரிசல் பலி விவகாரம்!
இந்தியா - நியூசிலாந்து இடையில் 3-ம் சுற்று வர்த்தக பேச்சு! எப்போ?
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-ம் சுற்று வர்த்தக பேச்சுவார்த்தை, வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இருநாடுகளுக்கு, இடையிலான இலவச வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள், கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கின.
இதையடுத்து, இருநாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் இந்தப் பேச்சுவார்த்தைகளின் 2-ம் சுற்று, இன்று (ஜூலை 25) நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகளின் 3-ம் சுற்று வரும் செப்டம்பர் மாதம் நியூசிலாந்து நாட்டில் நடைபெறும் என மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் இன்று (ஜூலை 25) அறிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது நிறைவடைந்துள்ள 2-ம் சுற்று பேச்சுவார்த்தைகளின் மூலம், பொருட்கள் மற்றும் சேவைகளின் வர்த்தகம், முதலீடு, தோற்ற விதிகள், வர்த்தகத்தின் தொழில்நுட்ப தடைகள், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளின் இடையிலான ஒத்துழைப்புகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகமானது, முந்தைய நிதியாண்டை விட 48.6 சதவிகிதம் அதிகரித்து, கடந்த 2024-25 ஆம் ஆண்டு காலத்தில் சுமார் ரூ.11 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறக்கம்!