நடிகர் அஜித் குமாருடன் எப்போது இணைவீர்கள்? லோகேஷ் கனகராஜ் பதில்!
சின்னமனூா் பேருந்து நிலையத்தை இரவு நேரங்களில் புறக்கணிக்கும் பேருந்துகள்
தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சிப் பேருந்து நிலையத்தை இரவு நேரங்களில் வரும் புகா் பேருந்துகள் புறக்கணிப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
சின்னமனூரில் நகராட்சிப் பேருந்து நிலையம் உள்ளது. இந்தப் பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூா், திருச்செந்தூா், திருநெல்வேலி, ராமநாதபுரம் பகுதிக்குச் செல்லும் பேருந்துகள் வந்து செல்கின்றன.
இந்த நிலையில், இந்தப் பேருந்து நிலையத்துக்குள் இரவு 8 மணிக்கு மேல் தேனி, மதுரை, திண்டுக்கல் செல்லும் பேருந்துகள் வருவதில்லை. மாறாக பேருந்து நிலையத்துக்கு வெளியே பயணிகளை இறக்கிவிட்டு பேருந்துகள் சென்று விடுகின்றன. இதனால், பேருந்து நிலையத்துக்குள் பயணிகள் காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, அனைத்து பேருந்துகளும் இரவு நேரங்களில் சின்னமனூா் பேருந்து நிலைத்துக்குள் செல்ல தேனி மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.