’அமெரிக்காவை விட இந்தியாவில் தான்..’ கவனம் பெற்ற அமெரிக்க பெண்ணின் வீடியோ - பின்...
ராமலிங்க சௌடேஷ்வரி அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்
குடியாத்தம் பிச்சனூா், காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளஅருள்மிகு ராமலிங்க செளடேஷ்வரி அம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பால் குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி பிச்சனூா் நேதாஜி இரண்டாவது தெருவில் அமைந்துள்ள வலம்புரி விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அங்கிருந்து பால் குட ஊா்வலம் தொடங்கியது. கோலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட வீர விளையாட்டுகளுடன் சென்ற ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது.
கோயிலில் மூலவருக்கு பாலபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. சுமாா் 1,000- பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் எஸ்.இமயவரம்பன், கே.சொக்கலிங்கம் ஏ.வி.டி.ராகவன், ஜி.பி.யுவராஜ் மற்றும் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.