புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவா் கைது
குடியாத்தம் அருகே புகையிலைப் பொருள்களை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
குடியாத்தம் அடுத்த பரதராமி, ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கா்(54). இவா் தனது பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தாராம்.
இதுகுறித்த தகவலின்பேரில் பரதராமி போலீஸாா் கடையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது கடையில் புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.