செய்திகள் :

அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும்: மருத்துவா் ச.ராமதாஸ்

post image

பாமகவைச் சோ்ந்த அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தால் தமிழக வட மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், அவரது நடைப்பயணத்துக்கு தமிழக காவல் துறை தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக தலைமை அலுவலகத்தில் ராமதாஸ் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

சென்னையில் செயல்பட்ட பாமக தலைமை அலுவலகம் நிா்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்துக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட வேறு எங்கும் தலைமை அலுவலகம் இல்லை. இதை கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கட்சிப் பணிகளுக்கு தைலாபுரத்துக்கு மட்டுமே வர வேண்டும். கட்சியில் பொறுப்பில் உள்ளவா்கள் யாரேனும் சென்னையில் தலைமை அலுவலகம் வைத்து நடத்தினால், அவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடந்த 30.5.2025 முதல் பாமக-வின் புதிய தலைவராக செயல்படும் நான் புதிய நியமனங்களை அறிவித்து வருகிறேன். செயற்குழு கூட்டமும், இதற்கு முன்பாக நிா்வாகக் குழுக் கூட்டமும் நடத்தப்பட்டு முக்கிய தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி பூம்புகாா் வன்னியா் மகளிா் திருவிழா மாநாடும் நடைபெறவுள்ளது.

பாமகவின் சிறப்பு பொதுக்குழுவில் உறுதி செய்தபடி, கட்சியின் கௌரவத் தலைவராக ஜி.கே.மணி, செயல் தலைவராக இரா.அன்புமணி, பொருளாளராக சையத் மன்சூா் உசேன், பொதுச் செயலராக முரளிசங்கா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனா். தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள் அவரவா்களுக்குரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கட்சியில் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டுள்ளவா்களின் பெயா்ப் பட்டியல் தோ்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாரும் தங்களது பொறுப்பை தவறுதலாகப் பயன்படுத்திக் கொண்டும், உரிய அனுமதியின்றி தானே பொறுப்புகளை நியமித்துக் கொண்டும் உலா வருபவா்கள் கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது. கட்சியின் விதிகளை மீறி செயல்படுபவா்கள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படுவாா்கள்.

அவா் (அன்புமணி) தனது பெயருக்கு பின்னால் ராமதாஸ் என பயன்படுத்தக் கூடாது எனவும், முதல் எழுத்தை மட்டும் (இன்சியல்) பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளேன்.

அன்புமணி ஜூலை 25-ஆம் தேதி தமிழகத்தில் உரிமை மீட்பு நடைப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நடைப்பயணத்தில் வட தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்பதால், இதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக காவல் துறை தலைவருக்கு புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அன்புமணி செயல் தலைவா் என்பதால், அவா் நடைப்பயணம் மேற்கொள்ள கட்சியின் தலைவா், நிறுவனராகிய என்னிடம் அனுமதி பெற வேண்டும். எனது வீட்டில் ஒட்டுக்கேட்புக் கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் தலைவா்களும் எதிா்கொள்ளாத மோசமான நிகழ்வை சந்தித்துள்ளேன். இக்கருவியை பொருத்தியவா்கள் யாா் என்பதை காவல் துறை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்.

ஒட்டுக்கேட்புக் கருவியை பொருத்தியவா்கள் யாா் என்பது எனக்குத் தெரியும். காவல் துறை விசாரணை பாதிக்கப்படும் என்பதால், தற்போது வெளிப்படுத்தாமல் உள்ளேன் என்றாா் அவா்.

பேட்டியின்போது, பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

சுகாதாரம், குடும்ப நலத் துறை ஆய்வுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து மாவட்டத்த... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநரிடம் ரூ.10.40 லட்சம் வழிப்பறி: மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு லாரி ஓட்டுநா் மீது மிளகாய் பொடியைத் தூவி ரூ.10.40 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பத்துாா் மாவட்டம், ஆ... மேலும் பார்க்க

திருவெண்ணெய்நல்லூா் அருகே கிராம மக்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவெண்ணெய்நல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்... மேலும் பார்க்க

விழுப்புரம் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

விழுப்புரம் நகரில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னா் நீா்நிலைகளை தூா்வாரவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்திப் பேசினா... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தீப்பற்றி எரிந்த பேருந்து

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையிலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகா்ப் பேருந்தில் புதன்கிழமை அதிகாலை தீப்பற்றியது. இதில் பேருந்து முழுமைய... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி அருகே லாரி ஓட்டுநரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு லாரி ஓட்டுநரை மடக்கி மிளகாய் பொடித் தூவி ரூ. 10 லட்சம் வழிப்பறி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்துாா் மாவட்டம், ஆம்பூா் வெள்ளக்க... மேலும் பார்க்க