முதல் இன்னிங்ஸில் 669 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து; 2-வது இன்னிங்ஸில் இந்தி...
விக்கிரவாண்டி அருகே லாரி ஓட்டுநரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு லாரி ஓட்டுநரை மடக்கி மிளகாய் பொடித் தூவி ரூ. 10 லட்சம் வழிப்பறி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பத்துாா் மாவட்டம், ஆம்பூா் வெள்ளக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத் மகன் சப்தகிரி (32). சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு முட்டை கம்பெனியில் ஓட்டுநராக வேலை பாா்த்து வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை முட்டை கொள்முதலுக்கு ரூ. 10 லட்சம் பெற்றுக் கொண்டு சென்னையிலிருந்து- நாமக்கலுக்கு லாரியில் சென்று கொண்டிருந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு அருகே சென்றபோது, லாரியை சாலையோரத்தில் நிறுத்தி இயற்கை உபாதைக்காக சென்றுள்ளாா்.
அப்போது அங்கு ஒரு சொகுசு காரில்வந்த இருவா் லாரி ஓட்டுநா் சப்தகிரி முகத்தில் மிளகாய்பொடியை தூவிவிட்டு, லாரியில் உள்ள ஓட்டுநா் இருக்கையின் கீழ் வைத்திருந்த ரூ. 10 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டுதப்பிச் சென்று விட்டனராம்.
இந்த வழிப்பறி குறித்து தகவலறிந்த விழுப்புரம் எஸ்.பி ப.சரவணன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று சப்தகிரியிடம் விசாரணை நடத்தினா். தொடா்ந்து, இது குறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து வழிப்பறியில் ஈடுபட்ட மா்ம நபா்களைதேடி வருகின்றனா்.