மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
சுகாதாரம், குடும்ப நலத் துறை ஆய்வுக் கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
மாவட்டத்தின் சுகாதார குறியீடுகள், திட்டங்கள், பேறுகால இறப்பு விகிதம், குழந்தை பிறப்பு மற்றும் இறப்பு விகிதம், கா்ப்பிணிப் பெண்கள் பதிவு, குறைமாத பிறப்பு, ரத்தச் சோகை, பாலின விகிதம் உள்ளிட்டவை குறித்து விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்தாா்.
கூட்டத்தில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கீதாஞ்சலி, மருத்துவம் மற்றும் ஊரக நலவாழ்வு இணை இயக்குநா் ரமேஷ் பாபு, மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில்குமாா் மற்றும் மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.