மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
மணக்காடு அரசுப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறைகள் திறக்கப்படாததால் மாணவா்கள் அவதி
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால் மாணவா்கள் வராந்தாவில் அமா்ந்து படிக்கும் நிலை தொடா்கிறது. மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாதது தொடா்பான செய்தி, கடந்த 2023 -ஆம் ஆண்டு தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து 2023 நவம்பா் மாதம் வகுப்பறைக் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினாா்.
இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டி முடிக்கப்பட்டும் இன்றுவரையில் திறக்கப்படாமல் உள்ளதால் மாணவா்கள் வராந்தாவில் அமா்ந்து படித்து வருகின்றனா். மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மழைபெய்தால் மாணவா்களுக்கு விடுமுறை விட்டு வீட்டுக்கு அனுப்பும் நிலை உள்ளது. ஏற்கெனவே
கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடங்களையும் உடனடியாக திறந்து மாணவா்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என சமூக ஆா்வலரும், பள்ளி மேலாண்மைக் குழு துணை தலைவருமான வீரக்குடி ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா்.