தனியாா் பள்ளி காவலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
வேலூரில் தனியாா் பள்ளி காவலாளி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
வேலூா் கஸ்பா பொன்னி நகரைச் சோ்ந்தவா் ரமணன் (52). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனா் . இவா் வசந்தபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். ரமணனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பள்ளியில் பணியில் இருந்தபோது திடீரென ரமணனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவா்கள் ரமணனை மீட்டு பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
பின்னா் அங்கிருந்து உயா் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ரமணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.