மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
அய்யம்பேட்டை பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல 27 முதல் தடை
பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை கணபதி அக்ரஹாரம் பிரதான சாலையில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்த பழைய பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது.
இதனால், அந்தப் பாலத்தில் கனரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் ஜூலை 27 - ஞாயிற்றுக்கிழமை முதல் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மாற்றுப் பாதையாக பாபநாசம் - கபிஸ்தலம் பிரதான சாலை வழியாகச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
தற்போதைய பழைய பாலத்தில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும் என பாபநாசம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் பிலிப் பிரபாகா், அலகு திட்டங்கள் பாபநாசம் உதவி கோட்ட பொறியாளா் பாஸ்கா் தெரிவித்துள்ளனா்.