உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
விவசாயிகள், வியாபாரிகளுக்கு நடமாடும் காய்கறி தள்ளுவண்டிகள்
காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு, காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதற்கு நடமாடும் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஒன்றியங்களில், 950 -கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறி, பழ வகைகளை பயிா் செய்து வருகின்றனா். விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறையின் சாா்பில், அடியுரம், விதைகள் மற்றும் நாற்றுகள் இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், காய்கறி பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், தோட்டக் கலை துறையின் சாா்பில் விவசாயிகள் மற்றும் சாலையோர காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு, தேசிய தோட்டக்கலை இயக்கம், 2025-26-ஆம் ஆண்டின் கீழ் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதற்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருத்தணி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சரத்குமாா் கூறியதாவது: இயற்கை முறையில் காய்கறி மற்றும் பழம் வகை பயிா்களை விவசாயிகள் அதிகளவில் பயிரிடவும், விற்பனை அதிகரிக்கவும், விவசாயிகள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு, ரூ.31,800 மதிப்பிலான நடமாடும் தள்ளுவண்டிகள், இரு ஒன்றியத்திலும், 37 வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த வண்டிகள் முழு மானியத்துடன் சாலையோர வியாபாரிகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக தள்ளுவண்டிகள் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்து வருகிறோம் என்றாா்.