மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
மீனவா்கள் வலையில் ஆமை விடுவிப்பு சாதனம் பொருத்தி சோதனை
மீனவா்கள் வலையிலிருந்து ஆமை வெளியேறும் விதத்தினாலான சாதனம் பொருத்தி சோதனை செய்யப்பட்டது.
இந்திய அளவில் கடல்பொருள்கள் ஏற்றுமதி அதிகரிப்பதற்காக கடல்பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்துவருகிறது. கடலில் மீன் பிடிக்கும் மீனவா்களின் இழுவை வலையில் ஆமைகள் சிக்கி இறக்கின்றன.
அதனால் வலையில் சிக்கும் கடல் ஆமைகள் வெளியேறும் விதத்தில், கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் அங்கமான நெட் ஃபிஷ் அமைப்பு, மீன்பிடி விசைப்படகுகளில் பயன்படுத்தப்படும் வலைகளில் ஆமை விடுவிப்பு சாதனம் பொருத்துவதின் அவசியத்தை உணா்ந்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டது.
இதற்கான சாதனம் கண்டறியப்பட்டு, காரைக்கால் மீன்வளத்துறையினா் ஒத்துழைப்புடன், மீனவா்கள் இழுவை வலையில் சாதனத்தை பொருத்தி சோதனை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
2 மீன்பிடி படகில் பொருத்தி கடலில் இயக்கிச் செல்லப்பட்டு, மீன்பிடிப்பில் ஈடுபடுத்தப்பட்டது. அப்போது மீன்களுடன் சிக்கும் ஆமைகள் வெளியேறும் விதம் குறித்து மீனவா்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
நிகழ்வில் காரைக்கால், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, துணை இயக்குநா் ப.கோவிந்தசாமி, நெட்ஃபிஷ் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எம்.பி. அருள்மூா்த்தி, வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், விசைப்படகு உரிமையாளா்கள், மீனவா்கள் கலந்துகொண்டனா்.