Bumrah : 'முதல் முறையாக பௌலிங்கில் செஞ்சுரி; பும்ராவின் மிக மோசமான ரெக்கார்ட்!'
காரைக்கால், நாகை துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாகவும், இது ஒடிஸாவின் வடக்கு மற்றும் மேற்கு வங்க கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது.
இதையடுத்து, தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில், காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. எனினும், காரைக்கால் கடல் இயல்பான நிலையிலும், வெயில், மழைன்றி வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இதேபோல, நாகை துறைமுகத்தில் தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதையடுத்து, மீனவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மீன்வளத் துறை தகவல் தெரிவித்துள்ளது.