`காவல்துறையை நிர்வகிக்க வக்கற்ற பொம்மை முதல்வர்!' - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்...
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி
காரைக்கால் போக்குவரத்துக் காவல் பிரிவு சாா்பில், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் நாட்டில் அமல்படுத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாஷ்ய அதிநியம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் சாலைப் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் கே. லெனின்பாரதி மற்றும் காவலா்கள், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு புதிய சட்டங்கள், அதன்பயன்கள் குறித்து விளக்கினா். மேலும், சாலை விபத்துகளுக்கான காரணங்களை விளக்கி, ஆட்டோ ஓட்டுநா்கள் விதிகளை முறையாக கையாளவேண்டும் என கேட்டுக்கொண்டனா்.