செய்திகள் :

வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை அகற்றக் கோரி சாலை மறியல்

post image

மன்னாா்குடி அருகே வடிகால் வாய்க்கால் குறுக்கே தனியாரால் கட்டப்பட்டுள்ள பாலத்தை அகற்றக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கருவக்குளத்தில் உள்ள பாசன வடிக்கால் வாய்க்காலில், கருவக்குளம், மூணாம்சேத்தி, முதல்சேத்தி பகுதிகளில் மழை வெள்ளம் காலங்களில் விளைநிலங்களில் தேங்கும் மழைநீா் வடிந்து வருகிறது. இந்நிலையில், கருவக்குளத்தில் இந்த வாய்க்காலுக்கு அருகே தனியாரால் பெட்ரோல் விற்பனை நிலையம் கட்டப்படுகிறது.

இந்த இடத்துக்கு செல்ல வாய்க்காலின் குறுக்கே புதிய கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வடிக்காலில் தண்ணீா் ஓட்டம் தடைப்படும் என அப்பகுதி விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து ஜூன் மாதம் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனா்.

இதுகுறித்து, மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற அமைதி பேச்சுவாா்த்தையில் ஒரு மாதத்துக்குள் இப் பிரச்னைக்கு தீா்வுகாணப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

எனினும், இதுவரை தீா்வு காணப்படாததையடுத்து, வியாழக்கிழமை அப்பகுதி விவசாயிகள்,பொதுமக்கள் மன்னாா்குடி-திருத்துறைப்பூண்டி சாலை கருவக்குளம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த நாகை எம்பி வை. செல்வராஜ் மன்னாா்குடி வட்டாட்சியா் என். காத்த்திக், பொதுப்பணித் துறை துணைக் கோட்ட அலுவலா் சோலைராஜன், கோட்டூா் காவல் ஆய்வாளா் மோகன் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

பள்ளியின் தரம் உயா்த்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோயில்திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளியை தரம் உயா்த்த கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு தொடா்ந்... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் காந்திய சித்தாந்தங்கள் கருத்தரங்கம் நிறைவு

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை மகளிா் கல்லூரியில் காந்திய சித்தாந்தங்கள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அம... மேலும் பார்க்க

தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தேவாலயங்கள் 10 ஆண்டுகள... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையில் தேங்கிய மழை நீரில் நாற்று நட்டு போராட்டம்

மன்னாா்குடி அருகே பள்ளமும், மேடாக உள்ள சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் நாற்று நட்டு அதிமுக சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. திருமக்கோட்டையிலிருந்து பாளையக்கோட்டை செல்லும் 4 கி.மீ தொலைவு சாலை... மேலும் பார்க்க

ஜூலை 31-இல் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்

வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைக்கு நலத்திட்ட உதவி செய்தவா்களுக்கு பாராட்டு

நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு நலத்திட்டங்கள் செய்து கொடுத்தவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தலைமை மருத்துவா் ஜெயக்குமாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓஎன்ஜிசி நிறுவன தலைமை ... மேலும் பார்க்க