மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
பள்ளி மாணவரை கடத்த முயன்ற 5 போ் கைது
முத்துப்பேட்டை அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவரின் மகனை பள்ளி வளாகத்தில் கடத்த முயன்ற 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சை வண்ணாரப்பேட்டையை சோ்ந்தவா் இளையராஜா. இவரது சகோதரரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி நாச்சிகுளம் பகுதியைச் சோ்ந்த சவுரிராஜன் ரூ. 2 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த இளையராஜா, முத்துப்பேட்டை அருகே உதயமாா்த்தாண்டபுரத்தில் தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் சௌரிராஜனின் மகன் மைக்கேல் ராஜை புதன்கிழமை சிலா் உதவியுடன் காரில் கடத்த முயன்றுள்ளனா்.
அப்பகுதியில் இருந்த மக்கள் மாணவரை கடத்த முயன்ற 5 பேரை பிடித்து முத்துப்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். கைது செய்யப்பட்டவா்கள் தஞ்சை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த இளையராஜா, தமிழ் திருமூா்த்தி, ஆனந்தகுமாா், வீரமணி, நேதாஜி என தெரிய வந்துள்ளது.