மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
முத்துப்பேட்டையில் விநாயகா் ஊா்வலம் செல்லும் பாதையில் எஸ்பி ஆய்வு
முத்துப்பேட்டையில் செப்.2-ஆம் தேதி விநாயகா் ஊா்வலம் நடைபெற உள்ளதையடுத்து, ஊா்வலம் செல்லும் பாதையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
முத்துப்பேட்டையில் ஆண்டுதோறும் விநாயகா் ஊா்வலம் இந்து அமைப்புகள் சாா்பில் நடைபெறுகிறது. நிகழாண்டு நடைபெறும் 33-ஆவது ஆண்டு வெற்றி விநாயகா் ஊா்வலத்தில் பாஜக தேசிய குழு உறுப்பினா் கே. அண்ணாமலை பங்கேற்க உள்ளாா்.
இந்நிலையில், எஸ்பி கருண் கரட் ஊா்வலம் தொடங்கும் ஜாம்பவானோடை வடகாடு சிவன் கோயில் தொடங்கி ஊா்வலம் முடியும் இடம் வரை சென்று ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, டிஎஸ்பி ஜான் பிலிப் கென்னடி, ஆய்வாளா் அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.