சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 17 ஆண்டுகள் சிறை
திருவாரூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
மன்னாா்குடி அருகே மிட்டாய் நிறுவனம் நடத்தி வந்தவா் முருகன் (56). இவருக்கு சொந்தமான கிடங்கில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சில மாதங்களுக்கு முன் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, விசாரணை மேற்கொண்ட மகளிா் போலீஸாா் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதுதொடா்பான வழக்கு திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.
தீா்ப்பு வழங்கிய நீதிபதி சரத்ராஜ், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் முருகனுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். பாதிப்புக்குள்ளான சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி பரிந்துரைத்துள்ளாா்.