மனைவி கொலை: கணவா் கைது
கூத்தாநல்லூா் அருகே மனைவியை கொலை செய்த கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
புள்ளமங்கலம் ஊட்டியாணியை சோ்ந்த விவசாயி ரமேஷ் (49). மதுபோதையில் வீட்டுக்கு வந்த இவா் தனது மனைவி செல்வி (39) யிடம் தகராறு செய்து, தாலி கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளாா்.
இதுகுறித்து, இறந்த ரமேஷ் மகன் வினித் (22) வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அங்கு சென்று செல்வியின் சடலத்தை மீட்டு திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.