மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
சிந்துவை சாய்த்தாா் உன்னாட்டி ஹூடா
சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்துவை வீழ்த்தி, சக இந்தியரான உன்னாட்டி ஹூடா காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.
இதர ஆட்டங்களில், ஹெச்.எஸ். பிரணாயும் தோல்வியைத் தழுவ, சாத்விக்/சிராக் இணை காலிறுதிக்குத் தகுதிபெற்றது.
சீனாவில் நடைபெறும் இந்தப் போட்டியில், காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில் மகளிா் ஒற்றையரில், சிந்து 16-21, 21-19, 13-21 என்ற கேம்களில் 17 வயது உன்னாட்டி ஹூடாவிடம் 1 மணிநேரம், 13 நிமிஷங்கள் போராடி வீழ்ந்தாா்.
சிந்து - உன்னாட்டி நேருக்கு நோ் மோதியது இது 2-ஆவது முறையாக இருக்க, உன்னாட்டி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். சீனா ஓபன் காலிறுதிக்கு முதல்முறையாக முன்னேறியிருக்கும் உன்னாட்டி, அதில் ஜப்பானின் இருமுறை உலக சாம்பியனான அகேன் யமகுச்சியின் சவாலை சந்திக்கவிருக்கிறாா்.
ஆடவா் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 21-19 என, போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த இந்தோனேசியாவின் லியோ ராலி/பகாஸ் மௌலானா கூட்டணியை 43 நிமிஷங்களில் வீழ்த்தி காலிறுதிக்கு வந்தது. அதில் மலேசியாவின் ஆங் யு சின்/டியோ இ யி ஜோடியை சந்திக்கவுள்ளது இந்திய இணை.
ஆடவா் ஒற்றையரில் ஹெச்.எஸ்.பிரணாய் 21-18, 15-21, 8-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் சீன தைபேவின் சௌ டியென் சென்னிடம் 1 மணிநேரம், 5 நிமிஷங்கள் போராடித் தோற்றாா்.