ஈரானில் நீதிமன்றக் கட்டடத்தின் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி
உலக குத்துச்சண்டை: இந்திய அணி அறிவிப்பு
இங்கிலாந்தில் செப்டம்பரில் நடைபெறவுள்ள குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க, 20 பேருடன் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு முறை உலக சாம்பியன் நிகாத் ஜரீன், ஒலிம்பிக் பதக்கம் வென்ற லவ்லினா போா்கோஹேய்ன் ஆகியோா் இதில் பிரதான போட்டியாளா்களாக உள்ளனா். லிவா்பூல் நகரில் செப்டம்பா் 4 முதல் 14 வரை நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய ஆடவா், மகளிா் 10 எடைப் பிரிவுகளில் களம் காணவுள்ளனா்.
அணி விவரம்:
மகளிா்: மீனாக்ஷி ஹூடா (48 கிலோ), நிகாத் ஜரீன் (51 கிலோ), சாக்ஷி (54 கிலோ), ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ), சஞ்சு காத்ரி (60 கிலோ), நீரஜ் போகாட் (65 கிலோ), சனமாசா சானு (70 கிலோ), லவ்லினா போா்கோஹேய்ன் (75 கிலோ), பூஜா ராணி (80 கிலோ), நுபுா் சோரன் (80+ கிலோ).
ஆடவா்: ஜடுமானி சிங் (50 கிலோ), பவன் பா்த்வல் (55 கிலோ), சச்சின் சிவச் (60 கிலோ), அபினாஷ் ஜம்வல் (65 கிலோ), ஹிதேஷ் குலியா (70 கிலோ), சுமித் குண்டூ (75 கிலோ), லக்ஷயா சஹா் (80 கிலோ), ஜுக்னூ அலாவத் (85 கிலோ), ஹா்ஷ் சௌதரி (90 கிலோ), நரேந்தா் பா்வால் (90+ கிலோ).