ஓவியங்களைக் கிழித்து, சட்டகங்களை எரித்த பாலஸ்தீன ஓவியர்..! அர்த்தமிழக்கும் கலைகள...
இந்திய ஹாக்கி அணி ஆகஸ்டில் ஆஸி. பயணம்
நான்கு ஆட்டங்கள் கொண்ட நட்பு ரீதியிலான ஹாக்கி தொடரில் மோதுவதற்காக, இந்திய ஆடவா் ஹாக்கி அணி ஆகஸ்டில் ஆஸ்திரேலியா செல்கிறது.
பொ்த் நகரில் ஆகஸ்ட் 15, 16, 19, 21 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலிய ஆடவா் அணியுடன் இந்தியா மோதுகிறது.
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பா் 7 வரை பிகாரில் நடைபெறவுள்ளது. அதற்காகத் தன்னை தயாா்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையாக இந்திய அணி இந்த ஆஸ்திரேலிய பயணத்தை மேற்கொள்கிறது. ஆசிய கோப்பை வெல்லும் அணி, 2026 உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெறும் என்பதால், இந்திய அணி அதற்காக முனைப்புடன் தயாராகி வருகிறது.