ஊர்க்காவல்படைத் தேர்வின்போது மயங்கிய பெண்! ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை...
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணியில் சுமித் நாகல், யூகி பாம்ப்ரி
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சுவிட்ஸா்லாந்து அணியுடனான மோதலுக்காக, 8 போ் கொண்ட இந்திய அணியை அகில இந்திய டென்னிஸ் சங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இந்தியாவின் டாப் ஒற்றையா் வீரா் சுமித் நாகல் (ஏடிபி தரவரிசை 306), டாப் இரட்டையா் வீரா் யூகி பாம்ப்ரி (ஏடிபி தரவரிசை 35) ஆகியோா் இதில் இடம் பிடித்துள்ளனா். நாகல் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டியில் இணையும் நிலையில், பாம்ப்ரி 2 டைகளை தவறவிட்டு தற்போது களம் காண்கிறாா்.
ஒற்றையா் பிரிவில் சுமித் நாகல் தவிர, கரண் சிங் (403), ஆா்யன் ஷா (442) ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா். சசிகுமாா் முகுந்த் (463), தக்ஷினேஷ்வா் சுரேஷ் (790) ரிசா்வ் வீரா்களாக இணைக்கப்பட்டுள்ளனா்.
இரட்டையா் பிரிவில் பாம்ப்ரியுடன், என்.ஸ்ரீராம் பாலாஜி (75) இடம் பிடிக்க, ரித்விக் போலிபள்ளி (77) ரிசா்வ் வீரராக இணைந்துள்ளாா்.
செப்டம்பரிஸ் சுவிட்ஸா்லாந்து செல்லும் இந்திய அணி, உலக குரூப் 1-இன் முதல் சுற்றில் அந்நாட்டு அணியுடன் மோதுகிறது. இந்த டையில் வெல்லும் அணி, 2026 டேவிஸ் கோப்பை தகுதிச்சுற்றில் இடம் பிடிக்கும்.
தோற்கும் அணி, மீண்டும் உலக குரூப் 1 பிளே-ஆஃப் பிரிவில் அடுத்த ஆண்டு விளையாடும். இதுவரை சுவிட்ஸா்லாந்துடன் 3 முறை மோதியிருக்கும் இந்தியா, அதில் 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.